முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரதட்சணை வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல முயன்றவர் சிக்கினார்

புதன்கிழமை, 6 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - வரதட்சணை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அவரை விமான நிலைய போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.சென்னை ராயபுரம் சூரியநாராயணா செட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 34). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கமித்திரை(26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.திருமணம் முடிந்த சில வாரங்களில் சுரேஷ், தனது மனைவி சங்கமித்திரையிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சுரேசின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சங்கமித்திரை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அதில் அவர் ‘வரதட்சணை கேட்டு என்னை கணவரும் அவரது குடும்பத்தினரும் அடித்து கொடுமைப்படுத்தினார்கள்’ என தெரிவித்து இருந்தார்.அவரது புகாரின்பேரில் போலீசார் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.வரதட்சணை வழக்கில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து சுரேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரது குடும்பத்தினர் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த சுரேஷ் வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டு சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று சென்றார். அப்போது அங்கு அவரை விமான நிலைய போலீசார் விசாரித்தபோது அவர் மீது ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு பதியப்பட்டிருந்ததும், அவர் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து விமான நிலைய போலீசார் அவரை கைது செய்து, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைதான சுரேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து