முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன்வளத்துறையின் திட்டங்கள் குறித்தான அமைச்சர் .கே.ஏ.ஜெயபால் ஆய்வு

புதன்கிழமை, 6 மே 2015      தமிழகம்

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிக்காட்டுதலின்படி, சென்னை மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற மீன்வளத்துறையின் திட்டங்கள் குறித்தான ஆய்வுக் கூட்டத்தில்,  மீன்வளத்துறை அமைச்சர் .கே.ஏ.ஜெயபால்  தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் மீன்வள மேலாண்மை செய்யப்படும் சாத்தனூர், பவானிசாகர், ஆழியார் மற்றும் பாலாறு பொருந்தலாறு நீர்த்தேக்கங்களில் பிடிக்கப்படும் மீன்களை மீன் விற்பனை நிலையங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்லும் பொருட்டு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி பங்களிப்புடன் ரூ. 25.00 இலட்சம் மதிப்பீட்டில் வாகனங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து,  மீன்வளத்துறை அமைச்சர்  கே.ஏ.ஜெயபால்  மீன்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து  பணி முன்னேற்றத்தினை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மீன்வளத்துறை  மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், குறிப்பாக கடல் மீனவர்களின் நலனுக்கென செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான மீன்பிடி தடைகால நிவாரணம், மீன்பிடிப்பு குறைந்த காலத்திற்கான சிறப்பு நிவாரணத் திட்டம், கடல் மீனவர்களுக்கான தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் மற்றும் மீனவ மகளிருக்கென  தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மின்னனு பணபரிவர்த்தனை மூலம் உதவித்தொகை பட்டுவாடா செய்யப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தான விவரங்கள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

மேற்காணும் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா பணியினை முடித்திடவும் அறிவுரை வழங்கினார். மேலும் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அவர்கள் வங்கி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து  தற்பொழுது மீன்துறையின் வாயிலாக  மின்னணு பரிவர்த்தனை மூலம்  உதவித்தொகை விநியோகிக்கப்பட்டு வரும் திட்டமான மீன்பிடித்தடைகால நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு மேலும் உதவித்தொகை விரைவாக சென்றடைய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மீனவர்களுக்கான இலவச வீட்டு வசதித்திட்டம் மற்றும் உள்நாட்டு மீன்வளத்தினை மேம்படுத்திடும் பொருட்டு மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய புரத மேலுணவு இயக்கக திட்டங்கள், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய திட்டங்கள், நீர்வள நிலவளத்திட்டம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டங்கள், வண்ணமீன் வளர்ப்பு திட்டங்கள், நீர்தேக்கங்களின் மீன்வள மேலாண்மை மற்றும் மீன்குஞ்சு உற்பத்தி  ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து விரிவாக  ஆய்வு செய்ததுடன் பணிகளை துரிதப்படுத்த அறிவுரை வழங்கினார்.  

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, அரசுச் செயலர், முனைவர் ச.விஜயகுமார், மீன்வளத்துறை ஆணையர் (பொறுப்பு). டி. ஆபிரகாம், மற்றும் தலைமை அலுவலக மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர்கள்,  மாவட்டங்களில் பணிபுரியும் மீன்வளத்துறை இணை, துணை மற்றும் உதவி இயக்குநர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து