முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓராண்டு நிறைவு: ஒரு வார கொண்டாட்டத்திற்கு பாஜக ரெடி

வியாழக்கிழமை, 7 மே 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, மத்தியில் பாஜக அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி ஒரு வார கொண்டாட்டத்திற்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முடிவு பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக அரசு அமைந்து வருகிற 26ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் வரும் 26ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு ஜன் கல்யாண் பர்வ் கடைப்பிடிக்கப்பட உள்ளது. பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில்,

வரும் 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஜன் கல்யாண் பர்வ் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி மூத்த தலைவர்கள் பலரும் நாடு முழுக்கப் பயணித்து மத்திய அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள், கொள்கைகள், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் செய்வார்கள் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து