முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.கே.வாசனுடன் ஸ்டாலின் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 8 மே 2015      அரசியல்
Image Unavailable

சென்னை,  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தமாகா, காங்கிரஸ், பிஜேபி தலைவர்களை திடீரென சந்தித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது..

மு.க.ஸ்டாலினின் தம்பி மு.க. தமிழரசு. இவரது மகன் அருள்நிதி.  இவர் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  அவருக்கும் நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் ஜூன் மாதம் 8-ந் தேதி கலைஞர் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது.
இதையொட்டி மு.க.ஸ்டாலின்  ஜி.கே.வாசனை சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார். அவருடன் மு.க. தமிழரசு  அவருடைய மகன் அருள்நிதி ஆகியோர் உடன் சென்றனர்.  அதே போல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரையும் சந்தித்து அவர் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.

எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய கட்சித்தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து