முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையை அடைந்தார் அழகர் இன்று சித்திரை திருவிழா நிறைவு

வெள்ளிக்கிழமை, 8 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கிட மதுரைக்கு பயணப்பட்ட அழகர், வைகையாற்றில் இறங்கி, 410 மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி நேற்று காலை மீண்டும் மலையை சென்றடைந்தார். இன்று உற்சவசாந்தியுடன் அழகர்  கோயில் சித்திரைத் திருவிழாவின் 10 நாள் கோலாகலம்  நிறைவடைகிறது.மதுரை விழாக்களில் மகத்தானது சித்திரைப் பெருவிழா, மீனாட்சியம்மன் கோயிலில் ஏப்.21ல் துவங்கிய விழா, ஒரு டஜன் நாட்களுக்கு நகரத்தை திருவிழா கோலாகலத்தில் குளித்தெழச் செய்தது. இதற்கிடையில் ஏப்.30ல் அழகர் கோயிலில் சித்திரைப் பெருவிழா துவங்கியது.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கிட வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்திற்கென மலையில் இருந்து மே 2ல் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். மே 3 ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகர், அழகராக வேடம் பூண்டார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்ட அழகர் தங்க குதிரை வாகனத்தில் ஏறி மே 4ல் வைகை ஆற்றில் இறங்கினார்.

வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக (தவளை) உருவில் தவம் இருந்த சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். தொடர்ந்து தசாவதாரம், பூப்பல்லக்கு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, நேற்று முன்தினம் புதூர், மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி வழியாக 410 மண்டகப்படிகளிலும் எழுந்தருளி நேற்று காலை 10.25 மணிக்கு கள்ளழகரான சுந்தரராஜப் பெருமாள் மலையை சென்றடைந்தார். மேளதாளங்கள், அதிர்வேட்டுகள் முழங்க பல வண்ண மலர்கள் தூவி இந்த வரவேற்பு நடத்தப்பட்டது.

18ம் படி கருப்பசாமி கோயில் முன்பாக தீபாராதனை காட்டப்பட்டு, வையாளி நிகழ்ச்சி நடைபெற்றது. 18 கன்னிப்பெண்கள் கைகளில் பூசணிக்காய் வழங்கப்பட்டு, சூடம் ஏற்றி திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவிந்தா கோஷம் முழங்க உள் பிரகாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டார். சித்திரைத் திருவிழாவின் 10ம் நாள் கோலாகலம் இன்று உற்சவ சாந்தியுடன் நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து