முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுகார்பேட்டை

சனிக்கிழமை, 9 மே 2015      சினிமா
Image Unavailable

பேய்ப் படங்களில் நடிப்பது வேறு; பேயாக நடிப்பது வேறு. ‘சவுகார்பேட்டை’யில் முதல் முறையாக பேயாக நடிக்கும் ராய்லட்சுமி, அதற்காக ஹாலிவுட் திகில் படங்களைப் பார்த்து, தன்னை மெருகேற்றி கொண்டிருக்கிறார். சாந்தமான பெண்ணாக இருந்து மாயா என்ற பேய்ப் பாத்திரத்துக்கு ராய் லட்சுமி மாறும் தருணத்தை, பலவிதங்களில் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

பேய்ப் படங்கள் என்றாலே கட்டாயம் கிளாமருக்கும் இடமிருக்கும். அந்த வகையில், இந்தப் படத்தில் சில காட்சிகளில், ராய் லட்சுமி தாராளம் காட்டியுள்ளார். தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில், எட்டுக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள இவர், முருகதாஸ் இயக்கும் ஹிந்திப் படத்திலும் பிஸி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து