முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியை இயக்கும் அட்டகத்தி ரஞ்சித்…?

சனிக்கிழமை, 9 மே 2015      சினிமா
Image Unavailable

ரஜினி அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். படத்தின் பட்ஜெட் 250 கோடிகள். இதுவரை இந்தியா சினிமா கண்டிராத பிரமாண்டம் என்று ஒருபுறம் முரசறைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இப்படியொரு வதந்தி. ரஜினி அடுத்து அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். எப்படி இதுபோன்ற வதந்தி கிளம்பியது என்று தெரியவில்லை. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தாணு தயாரிக்கிறார் என்பதுவரை செய்தி பரவிக்கிடக்கிறது. ரஞ்சித் இயக்கிய இரு படங்களும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் படங்களில்லை. ஒருவகையான கல்ட் படங்கள் மட்டுமே .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து