முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு தலைமைச்செயலக சங்கம் பாராட்டு

திங்கட்கிழமை, 11 மே 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு  தலைமைச்செயலக சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது .

 இது குறித்து அதன் தலைவர் கணேசன் வெளியிட்ட அறிக்கை:  ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா  பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றதையும் 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 37 பாராளுமன்றத் தொகுதிகளை வென்றெடுத்து இந்தியாவிலேயே மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாடாளுமன்றத்திலே கோலோச்சியதும் 2011 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தமிழகத்தினை இந்தியாவிலேயே முதல் மாநிலாமாகக் கொண்டு சென்றதையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு ஆகியவற்றில் தமிழகத்தின் பங்கினை நிலைபெறச் செய்ததையும் தமிழக மக்கள் என்றென்றைக்குமே மறக்க மாட்டார்கள்.

இந்நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்டையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா  அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.  ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல் இந்திய நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காவும் குறிப்பாக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சமுதாயத்தின் நலனைக் பாதுகாத்திடும் வகையில் வாழ்நாளில் பாடுபடுவார் என்ற உள்ளத்தின் உவகையோடு மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து