முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய நிலங்களை அபகரிப்பதில் பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது :ராகுல் கடும் தாக்கு

புதன்கிழமை, 13 மே 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - விவசாய நிலங்களை அபகரிப்பதில் மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது என்று பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். பாராளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, நிலம் கையக சட்டத்தைக் கொண்டுவர, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. விவசாயிகளை பாதிக்காத வகையில் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் ஒரு சில நாட்களில் அந்த சட்டத்தை பாஜக கூட்டணி அரசு சாகடித்து விட்டது. காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தில் இருந்த முக்கியப் பிரிவுகளை பாஜக அரசு நீக்கி உள்ளது. நிலத்தை கையகப்படுத்தும் போது, விவசாயிகளின் கருத்தை கேட்க வேண்டும் என்ற முக்கிய பிரிவை பாஜக அரசு நீக்கி உள்ளது. பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மோடி அரசு சாதகமாக செயல்படுகிறது.  அரசு நினைத்தால், யாரையும் (விவசாயிகளை) கேட்காமல் நிலத்தை எடுத்துக் கொள்வோம் என்று அரசு சொல்கிறது. இந்தச் சட்டத்தால் சமூகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்த ஆய்வு இல்லை.

இந்த திட்டத்தால் யாருக்கு பலன் என்பது குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. நிலத்தை கையகப்படுத்திய பின், 5 ஆண்டுகளுக்குள் எந்தத் திட்டமும் அங்கு கொண்டு வரப்படவில்லை என்றால், அந்த நிலத்தை விவசாயிகளுக்குத் திருப்பி தர வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில்தான் காங்கிரஸ் அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த பிரிவையும் பாஜக அரசு நீக்கி உள்ளது. நாட்டில் பயன்படுத்தாத நிலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை எடுப்பதற்கு பதில் விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பதில் பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது என்று ராகுல் காந்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து