முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் வீழ்ந்தது பெங்களூர்.

வியாழக்கிழமை, 14 மே 2015      விளையாட்டு
Image Unavailable

மொகாலி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  மழையால் தாமதமாக தொடங்கிய லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. ஐபிஎல் தொடரில், இதுவரை பஞ்சாப், டெல்லி அணிகள் மட்டும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறக்குறைய அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட்டது. எஞ்சிய அணிகள் இடையே ‘பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டி தொடரில் மொகாலியில் நடந்த 50வது லீக் ஆட்டத்தில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், விராட்கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இது கவுர ஆட்டமாக இருந்தது. இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் மழையால் இரண்டே முக்கால் மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு தொடங்கியது. மழை பாதிப்பால் இந்த ஆட்டம் 10 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இதன்படி பவர் பிளே 3 ஓவராகும். ஒரு பவுலர் அதிகபட்சமாக 2 ஓவர்கள் பந்து வீசலாம்.

‘டாஸ்' ஜெயித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய விருத்திமான் சஹா 12 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் அவசர கோலத்தில் அடித்து ஆடி விரைவில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள். அக்ஷர் பட்டேல் 20 ரன்னுடனும், ரிஷி தவான் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வைஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 10 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட்கோஹ்லி 19 ரன்னிலும் (9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கெய்ல் 17 ரன்னிலும் (14 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் 10 ரன்னிலும் (9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் நடையை கட்டினார். மன்தீப்சிங் 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சர்ப்ராஸ்கான் (4 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார்.

10 ஓவர்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் 3வது வெற்றியை ருசித்தது. 12வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து