முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள்: ஆறுதல் சொல்ல ராகுலுக்கு தோணாதது ஏன்? பாஜக

வெள்ளிக்கிழமை, 15 மே 2015      அரசியல்
Image Unavailable

ஐதராபாத், காங்கிரஸ் ஆட்சியில் தற்கொலை சம்பவங்கள் நடந்த போது அப்போது விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல தோணாதது ஏன்? என்றும் விவசாயிகள் பிரச்சினையை வைத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியலாக்குவதாகவும் தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சியும், தெலங்கானா பாஜகவும் விமர்சித்துள்ளன.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தெலுங்கானாவில் நேற்று பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில், அவர் விவசாயிகள் பிரச்சினையை வைத்து அரசியல் செய்கிறார், பாதயாத்திரை நிகழ்ச்சியை பெரும் கொண்டாட்டம் போல் நடத்துகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ராகுலின் பாதயாத்திரை குறித்து டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி. கே.கேசவராவ் கூறும் போது,

ராகுல் பாதயாத்திரை மேற்கொள்ளும் வழி நெடுகிலும் அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஏதோ கொண்டாட்டம் நடைபெறுவது போல் உள்ளது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லவே அவர் இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். எனவே, ஏழை விவசாயக் குடும்பங்களில் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

தெலங்கானா பாஜக செயலர் ஜி.கிருஷ்ணகுமார் ரெட்டி கூறுகையில்,

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பிரிக்கப்படாத ஆந்திரத்தில் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அபோதெல்லாம் ராகுல் காந்திக்கு, பாதயாத்திரை மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் எனத் தோணவில்லை. ஆனால், இப்போது பாதயாத்திரை மேற்கொள்கிறார். விவசாயிகள் பிரச்சினையை வைத்து அவர் அரசியல் செய்கிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து