முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு : கொட்டும் மழையிலும் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 15 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் திருப்பதி கோவிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்தது. கடந்த ஒரு வாரம் நீடித்த போராட்டம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுவாக கோடை காலத்தில் லட்சம் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலி்ல் சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக அரசு பஸ்கள் ஓடாததால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கோவிலில் சராசரியாக 60 ஆயிரம் பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர். மாநிலம் முழுவதும் பஸ்கள் ஓட தொடங்கியதும் நேற்று முன்தினம் காலையில் இருந்தே திருமலையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமலையில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டு இருந்தது. கோவிலுக்கு எதிரே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கொட்டும் மழையில் பக்தர்கள் பலர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இருந்து வெளியே வந்தவர்களும் மழையில் நனைந்தபடியே சென்றனர். இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். திருப்பதி கோவிலில் தோமாலை அர்ச்சனை, அலங்கார சேவை அபிஷேகம் போன்ற கட்டண சேவையில் இன்று முதல் சிறிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி இந்த தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யப்படும் என்றும் பின்னர் அவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கோவில் தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் கூறினார். இதே முறை கட்டண பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ரதீபசேவை ஆகியவற்றில் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து