முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் - கவர்னர் மோதல் வலுக்கிறது மற்றொரு அதிகாரியை நீக்க டெல்லி அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் கவர்னர் நஜீப் ஜங் இடையிலான மோதல் வலுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு அதிகாரியை கெஜ்ரிவால் அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நீண்ட நாட்களாகவே முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் காணப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அனைத்து போப்புகளையும் அனுப்பி விட்டுத்தான் முதல்வர் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் நஜீப் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதர்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சூழலில் இருதினங்களுக்கு முன்பு கெஜ்ரிவால் அரசில் டெல்லியில் முக்கிய பதவியான தலைமை செயலாளர் பதவிக்கு சகுந்தலா காம்ளின் என்பவரை பதவி உயர்வு அளித்து தற்காலிகமாக நியமித்து கவர்னர் நஜீப் ஜங் அறிவித்தார்.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, எனவே எங்களுக்கு யாரை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அரசியல் சாசன விதிகளை மதித்து கவர்னர் நடந்து கொள்ள வேண்டும் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். ஆனால் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக கவர்னர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் சேவை பிரிவில்  முதன்மை செயலாளராக இருந்த அனிந்தோ மஜூம்தார் என்பவரை அந்த பதவியில் இருந்து நீக்க கெஜ்ரிவால் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கவர்னர் நஜீப் ஜங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை அரசியல் சாசன விதிமுரைகளை மதிக்காத செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதே போல் பாஜவும் கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் விதிமுறைகளை முறையாக தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது என்று பாஜ தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து