முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி எழுமலையான் கோவிலில் பக்தர்கள் காத்திருக்க வேண்டாம்: சிறப்பு சேவையில் தரிசிக்க புதிய திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, திருப்பதி கோவிலில் சிற்பபு சேவைகளில் காத்திருக்காமல் தரிசிக்க குலுக்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளுக்கு நாள் திருமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் பல மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கல் சில விநாடிகள் மட்டுமே சுவாமியை தரிசிக்க முடிகிறது. இந்நிலையில், சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 60 நாட்களுக்கு முன்னதாக ஆண்லைனில் முன்பதிவு செய்யும் விதமாகவும், நேரடியாக திருமலையில் டிக்கெட் பெறும் விதமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இவை அனைத்து திட்டங்கலையும் தேவஸ்தானம் நேற்று முன் தினம் முதல் ரத்து செய்துள்ளது.

இதற்கு பதிலாக, குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள் பெறும் விதமாக ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நேற்று முன் தினம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் பக்தர்களுக்கு கூப்பன்கள் வழஹ்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சிறப்பு டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது.

இந்த திட்டத்தை இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தொடங்கி வைத்து பேசியதாவது:

திருப்பதி கோயிலில் சுப்ரபாதம் உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகள் நேரடி பதிவு மூலம் காலை 7 மணிக்கு வழஹ்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் இதற்காக முந்தையநாள் மாலை 6 மணி முதல் வரிசையில் காத்திருக்கின்றனர். குறைந்தளவு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால் வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் டிக்கெட் வழங்க முடியாது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் கூப்பன்கள் வழங்கப்பட்டு மாலை 6 மணிக்கு நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். இந்த தகவலை பெற்ற பக்தர்கள் இரவு 8 மணிக்குள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு மறுநாள் காலை நடைபெறும் சேவைகளில் பங்கேற்கலாம். அதன்படி சுப்ரபாத சேவைக்கு 100 டிக்கெட்டுகளும், கல்யாண உற்சவத்துக்கு 80 டி்கெட்டுகள், விஷேச பூஜைக்கு 125 டிக்கெட்டுகள், திருப்பாவாடா மற்றும் சகஷ்கர கலச அபிஷேகத் துக்கு தலா 25ம், நிஜபாத தரிசனத்துக்கு 100 டிக்கெட்டுகள் வரை குலுக்கல் முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து