முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலிடத்தை பிடித்தது மகிழ்ச்சி, கேப்டன் தோனி

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      விளையாட்டு
Image Unavailable

மொகாலி: ஐ.பி.எல். போட்டியில் 2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. முதலில் விளையாடிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்னே எடுக்க முடிந்தது. அக்ஷர் பட்டேல் அதிகபட்சமாக 29 பந்தில் 32 ரன்னும், ரிஷி தவான் 25 ரன்னும் எடுத்தனர். நெகி 2 விக்கெட்டும், ஈஷ்வர் பாண்டே, நெக்ரா, அஸ்வின், பிராவோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் விளையாடிய சென்னை அணி 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுபெலிசிஸ் 41 பந்தில் 55 ரன்னும், ரெய்னா 41 ரன்னும்,கேப்டன் தோனி 16 பந்தில் 25 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி பெற்ற 9வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தின் முடிவு சென்னை அணியின் முதல் இடத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி கூறியதாவது,

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் தகுதி சுற்றில் விளையாடுவதன் மூலம் கூடுதலாக ஆட்டம் கிடைக்கிறது. ஒரு ஆட்டத்தில் மோசமாக ஆடினாலும் இறுதிப்போட்டிக்கு நுழைய இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு அணியும் முதல் 2 இடங்களை பிடிப்பதே இலக்காக கொண்டு இருக்கும். நாங்கள் ஏற்கனவே பிளேஅப் சுற்றுக்கு முன்னேறி விட்டோம். என்றாலும் கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில்தான் ஆடினோம். இந்த வெற்றி மூலம் பிளே அப் சுற்றில் சிறப்பாக விளையாட இயலும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மில்லரின் கேட்சை ஜடேஜா பிடித்தது மிகவும் சிறப்பான ஒன்றாகும். எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள். சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் விளையாடும் சர்வதேச வீரர்கள் சிறந்த கேப்டன்கள் ஆவார்கள். இவ்வாறு தோனி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து