முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      உலகம்
Image Unavailable

வதோதரா, மும்பை அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

குஜராத்தில் உள்ள தொழிற்துறை சங்கங்களின் சார்பில் வதோதராவில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மும்பை அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா ஒத்துழைப்பு அளிப்பதாக பிரதமர் மோடியின் பயணத்தின் போது ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதே போல் சென்னை டெல்லி இடையிலான அதிவேக ரயில் தடம் அமைப்பதற்கும், இரண்டு நவீன மாதிரி ரயில் நிலையங்கள் அமைப்பதற்கும், ரயில்வே பல்கலை கழகம் அமைப்பதற்கும் சீனா ஒத்துழைப்பு அளிப்பதாக உறஉதி அளித்துள்ளது. ஏற்கெனவே மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பானும் நிதி உதவி அளிக்க தயாராக உள்ளது. இது தொடர்பாக இரண்டு மாநில முதல்வர்களும் பேச்சு வார்த்தை நடத்தி திட்டம் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

அதேபோல் குஜராத் முதல்வர் ஆனந்தி பெண் படேலின் சீன பயணத்தின் போது, குஜராத்தில் ரூ.29,000 கோடி முதலீடுகள் செய்வதாக சீனா உறுதி அளித்துள்ளது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.19,000 கோடியும், பிற திட்டங்களுக்கு ரூ.10,000 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி குஜராத்தில் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும் என முதல்வர் ஆனந்தி பென் படேல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து