முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளை

திங்கட்கிழமை, 18 மே 2015      உலகம்
Image Unavailable

சென்னை, : இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் மாபெரும் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சீனாவில் தனது முதல் கிளையை ஆரம்பித்திருப்பது பற்றி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

பிரதமர் . நரேந்திர மோடி  ஷாங்காய் நகரில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முதல் கிளையை ஆரம்பித்து வைத்தார். அப்போது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. சந்தா கோச்சார்  உடன் இருந்தார். மேலும் இக்கிளையின் ஆரம்ப விழாவில் இந்திய மற்றும் சீன அரசின் மூத்த அரசு அதிகாரிகளும், பல்வேறு முக்கிய தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
சீனாவில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டிருப்பது, அவ்வங்கியின் சர்வதேச அளவிலான செயல்பாடுகளுக்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது.

2003_-ம் ஆண்டு மார்ச் மாதம் இவ்வங்கி தனது பிரதிநிதித்துவ அலுவலகத்தை ஷாங்காய் நகரில் ஆரம்பித்தது. இந்த அலுவலகம் மூலம் சீனாவைச் சேர்ந்த வங்கிகளுடன் நெருக்கமான உறுதியான  உறவை அதிகரிக்கவும், அங்குள்ள கார்பொரேட் நிறுவனங்களுக்கு இந்தியா தொடர்பான வங்கிச் சேவைகளில்  அவசியமான தேவைகளை பூர்த்தி செய்யவும்  முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சீனாவில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முதல் கிளை ஆரம்ப விழாவில்  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திருமதி. சந்தா கோச்சார் பேசுகையில், “சீனாவில் எங்களது வங்கியின் முதல் கிளையை ஆரம்பித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்தியா மற்றும் சீனா இரு நாடுகளுக்கிடையேயான வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீடு வாய்ப்புகளில், ஷாங்காய் நகரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் எங்களது முதல் கிளையின் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முக்கிய பங்கு வகிக்க வழி வகுத்து இருக்கிறது. . இந்த புதிய கிளையின் ஆரம்பம் மூலம், அதிகரித்து வரும் இந்த அருமையான வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியானது மிகவும் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு செயல்படுவோம்” என்றார்.

இந்த ஷாங்காய் கிளையானது,  இத்துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட, நிபுணத்துவம் பெற்ற 17 வல்லுநர்களுடன் இக்கிளை தனது செயல்பாட்டை ஆரம்பித்திருக்கிறது. . ஷாங்காய் கிளையானது, சீனாவின் பேங்கிங் ரெகுலேட்டரி கமிஷனின் வழிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து