முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழிவாங்கும் அரசியலை பா.ஜ.க நடத்துகிறது: ராகுல் காந்தி தாக்கு

திங்கட்கிழமை, 18 மே 2015      அரசியல்
Image Unavailable

அமேதி, பழிவாங்கும் அரசியலை பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொள்கிறது. இதனால் உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் இதர மாநில விவசாயிகளும் அவதிப்படுகிறார்கள் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று மோடி அரசை விமர்சித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஜகதீஷ்புர் பகுதிக்கு ராகுல் காந்தி கதுராவில் இருந்து ஜகதீஷ்புர் மெகா உணவு பூங்கா வரை 2கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார்.பின்னர் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பழி வாங்கும் அரசியலை பாஜ க அரசு மேற்கொள்கிறது.ஜகதீஷ்பூர் உணவு பூங்காவிற்கு பாஜக உரிமத்தை ரத்து செய்துள்ளது. என்னை பழிவாங்கும் நடவடிக் கையில் பாஜக அரசு இந்த நடவடிக் கையை மேற்கொண்டிருக்கிறது. பாஜ க அரசு எடுத்த இந்த முடிவால் உண்மையில்  ஏழை விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.நாட்டின் இதரப்பகுதிகளிலும் இதே பழிவாங்கும் அரசியலை பாரதிய ஜனதா அரசு மேற்கொண்டுள்ளது. பஞ்சாப்,தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள்.

ஏழைகள்,விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் கருத்து கேட்டால் மோடி அரசுக்கு 10க்கு பூஜ்யம் தான் மதிப்பெண் கிடைக்கும்.மோடியின் 2அல்லது 3 பெரு நிறுவன நண்பர்களை கேட்டால் அவர்கள் மோடி அரசுக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் தருவார்கள். அமேதி அருகே உள்ள10 மாவட்ட விவசாயிகளின் நலன்களை பாதிப்பதாக உணவு பூங்கா உரிமம் ரத்து நடவடிக் கை இருக்கிறது. உணவு பூங்கா செயல்பாட்டிற்கு வந்திருந்தால் விவசாயிகள் தங்கள் உற்பத்தியை நேரடியாக இந்த உணவு பதப்படுத்தும் இடத்திற்கு கொண்டு வந்திருக்க முடியும்.பிரதமர் மோடி அயல் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்,ஆனால் காலம் தவறிய மழையால் பாதித்த விவசாயிகளை பார்க்க வருவதில்லை

இவ்வாறு அவர் பேசினார்.  ராகுல் காந்தி தனது அமேதி தொகுதிக்கு 3நாள் பயணமாக வந்திருந்தார் .அவரை ஆயிரக்கணக்கான விவசாயிகள் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து