முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிப் போட்டிக்கு சென்னை தகுதி பெறுமா? மும்பை இந்தியன்ஸ்யுடன் இன்று பலப்பரிட்சை

திங்கட்கிழமை, 18 மே 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை : 8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று  விளையாடின. நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டம் முடிந்தன. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டத்தில் விளையாடின. லீக் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே அப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 5வது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6வது இடத்தையும், டெல்லி டேர்டெவில்ஸ் 7வது இடத்தையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி இடத்தையும் பிடித்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 14 ஆட்டத்தில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தது. இதனால் பிளே அப் சுற்றில் முதல் தகுதி சுற்றில் ஆடுகிறது.

மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளன. பெங்களூர், ராஜஸ்தானை விட மும்பை அணி கூடுதல் வெற்றி பெற்றதால் 2வது இடத்தை பிடித்து மும்பை அணி 8 போட்டியில் வெற்றி பெற்றது. மற்ற 2 அணிகளும் 7 ஆட்டத்திலேயே வெற்றி பெற்றன. 2வது இடத்தை பிடித்ததன் மூலம் மும்பை அணி சென்னை சூப்பர் கிங்சுடன் முதல் தகுதி சுற்றில் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த அணிகளும் லீக் ஆட்டங்களில் தலா ஒரு முறை வெற்றி பெற்றன. மும்பையை வீழ்த்தி சென்னை அணி இறுதி போட்டிக்கு நுழையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மும்பை அணிக்கு கூடுதல் பலமாகும். சென்னை - மும்பை இடையேயான ஆட்டத்தில் தோற்கும் அணி 2வது தகுதி சுற்றில் விளையாடும். பெங்களூர், ராஜஸ்தான் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இந்த ஆட்டம் 22ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது. புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்த பெங்களூர் 4வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடும். இந்த ஆட்டம் 20ம் தேதி புனேயில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும். இறுதி போட்டி 24ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து