முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு பிரபல பத்திரிகையாளர் பிரபு சாவ்லா புகழாரம்

திங்கட்கிழமை, 18 மே 2015      தமிழகம்
Image Unavailable

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சட்டப் போராட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் ஜெயலலிதா தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார் என்றும், இந்த வாரத்தில் ஜெயலலிதா மீண்டும் அரியணையில் அமர்வார் என்றும், தனது அளவற்ற சாதனைகளின் மூலம் 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அவர் அமோக வெற்றி பெறுவார் என்றும் பிரபல ஆங்கில பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான பிரபு சாவ்லா கணித்துள்ளார்.

மேலும் தமிழகத்திலும் சரி, இதர மாநிலங்களிலும் சரி லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்டது அதிமுக எனும் மாபெரும் இயக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான பிரபு சாவ்லா ஒரு ஆங்கில நாளிதழில் எழுதியிருக்கும் கட்டுரை வருமாறு,மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறிது காலம் இடர்பாடு ஏற்பட்டிருந்த போதிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் அவருக்கான செல்வாக்கு எள்ளளவும் குறையவில்லை. மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சியினர் மிகுந்த மனச்சோர்வு அடைந்திருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் தன்னிரகற்ற எவராலும் வெல்ல முடியாத மக்கள் செல்வாக்கினை ஜெயலலிதா பெற்றிருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை. மக்களின் முதல்வர்ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் லட்சக்கணக்கான தொண்டர்களும் ஆதரவாளர்களும் மக்களின் முதல்வரின் உறுதி நிறைந்த செயல்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

அவரது அளப்பரிய திறமையின்மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் ஜெயலலிதா சிறப்பான அரசை நிறுவுவார் என்பதிலும் உறுதியாக உள்ளனர். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த உடனேயே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை மரியாதை நிமி்த்தமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது.சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவிப்பது மிகவும் அரிதான செயலாகும். தமிழக அளவிலும் அகில இந்திய அளவிலும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி நன்கு அறிந்து வைத்திருக்கிறார். 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டபேரவைத் தேர்தலிலும் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பார் என்பதை இது போன்ற நிகழ்வுகள் உறுதிபட எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த 170 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் என்பதை மக்களும் அறிவார்கள். ஜெயலலிதா தனித்துவம் மிக்க நிரவாகத்தை மேற்கொண்டுள்ளார். அவரது நிர்வாக இலக்கு மற்றும் கொள்கைகள் அனைத்தும் தமிழக மக்களின் நலன் ஒன்றே அவரது கொள்கை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மக்கள் நலத்திட்டங்களில் ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்கள் முன்னுரிமை பெற்றுள்ளனர். தமது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் தமிழக மக்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை மக்களின் முதல்வர் ஜெயலலிதா மிகத்தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்.

சத்துணவுத்திட்டத்தின் பொறுப்பாளராக தமது நிர்வாக பணியை தொடங்கிய ஜெயலலிதா அதில் மிகப்பெரும் வெற்றி கண்டார். எப்போதுமே மிகவும் ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் திட்டங்களுக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்து வந்துள்ளார். உதாரணமாக கடந்த 4 ஆண்டுகளில் ஜெயலலிதா பல்வேறு சிறப்புத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். குறிப்பாக பணவீக்கம் காரணமாக எழை மக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்க அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக மானியங்கள் அளித்து குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அவர் தொடங்கிய அம்மா உணவகங்களில் இட்லி, சாம்பார் மற்றும் சாத வகைகள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாயிலிருந்து 5 ரூபாய்க்குள் கிடைக்க வழி செய்தார். இதனை தொடர்ந்து அம்மா குடிநீர் திட்டத்தை தொடங்கி சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கினார். மேலும் நடுத்தர மக்களும் மிக பின்தங்கிய மக்களும் பயனடையும் வகையில் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் கிடைக்க வழிவகை செய்தார்.

குறிப்பிட்ட அளவிலான சிமெண்ட் மூட்டைகள் மூட்டை ஒன்றுக்கு ரூ 190 கிடைக்கவும் அதன் மூலம் அவர்களின் கனவு இல்லங்களை கட்டிக்கொள்ளவும் ஜெயலலிதா வழிவகை செய்தார். தமிழக மக்களுக்கு உணவு குடிநீர் மட்டுமில்லாமல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கவும் அம்மா மருந்தகங்களை தொடங்கினார். இதன் மூலம் விலை உயர்ந்த மருந்துகள் கூட மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்தன. ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை.

மாநில அரசில் காலியாக இருந்த பணியிடங்களில் விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டார். உதாரணமாக பள்ளிக்கூடங்களில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொதுவாக எந்த அரசும் அக்கறை செலுத்தாதது மட்டுமல்ல. அதற்கான நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால் இதில் தீவிர நடவடிக்கை எடுத்ததோடு அதை நிறைவேற்றியும் காட்டினார் ஜெயலலிதா. முந்தைய ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், மின் உற்பத்தி திட்டங்கள் பாதாள சாக்கடை திட்டங்கள் பள்ளிக்கூட கட்டிடங்கள் ஆறுகள் இணைக்கும் திட்டங்கள் , பாசன கால்வாய் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார்.

ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் 2023ன் கீழ் 15 லட்சம் கோடி ரூபாய் மூதலீடு தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் வாகன உற்பத்தியில் 25 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நிலை எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கார்களை தயாரிக்கும் சர்வதேச நிறுவனங்களான நிசான் , ஹூண்டாய் பி.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் உற்பத்தி மையங்களை நிறுவி வெற்றிகரமாக உற்பத்தி செய்து வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த எல்க்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் 18 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபல சர்வதேச நிறுவனங்களான டெல், சாம்சங், பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக எல்க்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது போன்ற தொழில் உற்பத்திக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தி கொடுத்ததால் 2010-11ம் ஆண்டில் 7 ஆயிரத்து 440 கோடி ரூபாயாக இருந்த நேரடி அந்நிய முதலீடு, கடந்த ஆண்டு 17 ஆயிரத்து 360 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவுக்கு உள்ள சிறந்த செல்வாக்கு காரணமாகவும் பொருளாதாரத்தில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவதில் அவர் எடுத்த முயற்சிகள் காரணமாகவும் உள்நாட்டு உற்பத்தியில் 8.25 சதவீதம் வளர்ச்சியடைந்து சாதனை படைத்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும் தமிழகத்தை ஜெயலலிதா உயர்த்தியுள்ளார். ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாக திறமை மற்றும் அற்புதமான நிதி மேலாண்மை கொள்கையால் கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இடைவெளி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அவர் மூன்றாவது முறையாக பொறுப்பேற்று கொண்டபோது 3 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறை முற்றிலுமாக நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு ரூ. 600 கோடியாக உபரி வருமானத்தை ஈட்டியுள்ளது. வியக்கத்தக்க வகையில் சமூக நலத்திட்டங்களுக்கு மிகப்பெரும் அளவில் நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் வருவாய் ஈட்டுவதில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது.

ஜெயலலிதாவின் சிறப்பான பொருளாதார நடவடிக்கைகளால் அதிமுக ஆட்சியில் மொத்த வருவாய் ஈட்டுதலில் 100 சதவீதம் உயர்ந்து தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக திகழ்கிறது. ஜெயலலிதாவின் பொருளாதார சிந்தனை மற்றும் அதற்கு தரும் ஊக்கம் அரசியல் மற்றும் வளர்ச்சியில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறது. மக்களின் முதல்வர் ஜெயலலிதா அற்புதமான திறமை அறிவாற்றல் படைத்தவர். சந்தேகத்திற்கு இடமின்றி மக்களின் முதல்வர் மீது விசுவாசமும் நம்பிக்கையும் வைத்துள்ள தொண்டர்களால் ஜெயலலிதா மிகச் சிறந்த வெற்றியை பெற்றுள்ளார்.

நல்லாட்சியையும், சிறந்த பொருளாதாரத்தையும் தரக்கூடிய ஒரு மாபெரும் தலைவராகவும் அவர் உருவெடுத்துள்ளார். அரசியல் எதிரிகளால் பின்னப்பட்ட சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதா, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு நிரபராதி என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தற்போது மாநிலத்தின் மிகப்பெரிய சக்தியாகவும் உருவெடுத்துள்ளார். பிரதமர் மோடியை போலவே ஜெயலலிதாவும் மக்களை கவரும் வகையில் பேசக் கூடிய பேச்சாற்றலையும் பெற்றுள்ளார். அவர் ஒரு சக்திவாய்ந்த தலைவராவார். மாநில எல்லைகளையும் கடந்து அவர் மக்கள் செல்வாக்கையும், அங்கீகாரத்தையும் பெறுவார் என்பது மட்டும் உறுதி.  இவ்வாறு அவர் அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து