முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசி ஊழலில் எனக்கு தொடர்பு கிடையாது தாய்லாந்து முன்னாள் பிரதமர் கோர்ட்டில் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      உலகம்
Image Unavailable

பாங்காக்: பல நூறு கோடி டாலரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அரிசி ஊழலில் நான் நிரபராதி என சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் பிரதமர் யின்லக் சின்வத்ரா கூறினார். யின்லக் பிரதமராக இருந்த போது அரிசி ஊழல் நடந்தது. இந்தஊழலால் அரசுக்கு பல நூறு கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. இதில் ஆஜராக வந்த யின்லக் சின்வத்ரா தான் நிரபராதி. இந்த வழக்கில் நான் அப்பாவி என்பது தெரிய வரும் என உச்ச நீதிமன்றத்தில் கூறினார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10ஆண்டு சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படும். யின்லக் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது அவரது ஆதரவாளர்கள் யின்லக் யின் லக் என கோஷம் எழுப்பினர்.

இந்த ஆண்டு மே மாதம் யின்லக் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஒரு நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்றத்தின் தீர்ப்பு தாய்லாந்து ராணுவம்  ஆட்சியை கைப்பற்றுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்டது. அரிசி மானிய திட்டத்தினை கண்காணிப்பதில் முன்னாள் பிரதமர் தனது கடமையை தவறி விட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. இதே குற்றச்சாட்டினை ராணுவம் நியமனம் செய்த நீதிமன்றமும் குற்றம் சாட்டியது. இதனால் யின் லக் 5ஆண்டுகள் அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.

தாய்லாந்தின் முன்னோடி திட்டமான அரிசி மானிய திட்டம் யின்லக்கின் பெயு தாய் கட்சி 2011ம்ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றி பெற உதவியிருந்தது. ஏழை மக்களுக்கு உதவுதற்காக அந்த அரிசி மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இந்த அரிசி மானிய திட்டத்தால் அரசுக்கு 446கோடி டாலர் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 1840கோடி டாலர் கோரி வழக்கு தொடர வேண்டும் என நிதித்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்தது.

தாய்லாந்தில் யின்லக்கின் சகோதரர் முன்னாள் பிரதமர் தக்ஷின் சின்வத்ரா 2006ம்ஆண்டுபதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த நடவடிக் கைக்கு பின்னர் தாய்லாந்தில் அரசியல் சூறாவளி ஏற்பட்டது. யின்வத்ராவின் குடும்பம் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்துள்ளது என ராணுவமும் மன்னர் ஆதரவாளர்களும் குற்றம் சாட்டினர். யின்லக்கின் குடும்பத்திற்கு எதிராக திட்டமிட்டே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து