முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்விட்டரில் ஒபாமாக கணக்கு துவங்கிய 12மணி நேரத்தில் 15லட்சம் பேர் பின்பற்றினர்

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி ட்விட்டர் வலை தளத்தில் கணக்கு துவங்கிய 12மணி நேரத்தில் 15லட்சம் பேர் அவரது தளத்தை பின்பற்றினர். அவரது ட்விட்டர் கணக் கை அயல் நாடுகளைச்சேர்ந்த 65தலைவர்களும் பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 6ஆண்டுகளில் முதன் முறையாக எனக்கு கணக்கு துவங்க ட்விட்டர் வாய்ப்பு அளித்துள்ளது என ஒபாமா தனது முதல் செய்தியை தெரிவித்தார். 4மணி நேரத்திற்கு பின்னர் அவர் வெளியிட்ட 2வது செய்தியில் நியூ ஜெர்சி மாகாணத்திற்கு அவர் செல்லும் விவரத்தை குறிப்பிட்டிருந்தார்.

ஒபாமா ட்விட்ரில் வெளியிட்ட 3வது செய்திக்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் பதில் அளித்திருந்தார்.தனது கணக்கு விவரத்தை யாரும் பார்வையிடலாம் என பில் கிளிண்டனுக்கு ஒபாமா திரும்ப பதில் அளித்தார். ஒபாமாவின் ட்விட்டர் கணக் கை அமெரிக்க கேபினட் அமைச்சர்கள் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகள் மற்றும்அமெரிக்காவின் முக்கிய துறை நிர்வாகிகள் பின்பற்றுகிறார்கள்.அமெரிக்க மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள இந்த ட்விட்டர் கணக்கு வழி வகுத்துள்ளது. தனது ஆட்சி நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒபாமா இந்த வலை தள கணக்கை துவக்கியுள்ளார். ஒபாமாவின் ட்விட்டர் கணக்கு போடஸ் என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து