முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி லட்டு டோக்கன் வினியோகம் எதிரொலி: ஆன்லைனில் லட்டு டோக்கன்- திருப்பதி தேவஸ்தானம்

புதன்கிழமை, 20 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் இனி ஆன்லைனிலும் லட்டு டோக்கன் பெறும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்த உள்ளது. திருமலை - திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லட்டு டோக்கன் மோசடி தொடர்பாக 3 தேவஸ்தான உழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 தற்காலிக பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். லட்டு டோக்கன் மோசடிகளை தடுக்க படிப்படியாக சில நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம். இனி பக்தர்கள் செல்லும் வரிசையிலே சாதாரண லட்டு டோக்கன்களுடன் இலவச லட்டுக்கான டோக்கன்களும் வழங்கப்படும். இத்திட்டம் முதலில் சர்வ தரிசன பக்தர்களுக்கும் பின்னர் திவ்ய தரிசனம், சிறப்பு தரிசன பக்தர்களுக்கும் அமல்படுத்தப்படும்.

தரிசனத்துக்காக ஆன்லைனில் பதிவுசெய்யும் பக்தர்கள், தங்களுக்கு தேவையான லட்டு பிரசாதங்களை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்துகொண்டு, திருமலைக்கு தரிசனத்துக்கு வரும்போது அவற்றை பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் அமல்படுத்தப்படும்." இவ்வாறு தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து