முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட இடர்பாட்டை தாங்க முடியாமல் உயிர் துறந்த 7 பேர் குடும்பங்களுக்கு ஜெயலலிதா ரூ 21 லட்சம் நிதி உதவி

புதன்கிழமை, 20 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட இடர்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாமல் அண்மையில் மரணமடைந்த 7 பேரின் குடும்பங்களுக்கு  ஜெயலலிதா சார்பில் தலா 3 லட்சம் வீதம் 21 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் இத்தொகையை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினர். நிதியை பெற்றுக்கொண்டவர்கள், மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து அ.திமு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்ஜெயலலிதாவுக்கு  ஏற்பட்டிருந்த இடர்ப்பாட்டைத் தாங்கிக் கொள்ள இயலாமல், அண்மையில் மரணமடைந்த 7 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம்  வீதம் 21 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி நேற்று  வழங்கப்பட்டது.

இதுவரை 251 பேர்களின் குடும்பங்களுக்கு 7 கோடியே 53 லட்சம் ரூபாயும்; 4 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாயும்; ஆக மொத்தம் ரூ 7 கோடியே 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு ஏற்பட்டிருந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தீக்குளித்தல், தூக்கிடுதல், விஷம் அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மரணமடைந்த 244 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட்ட 4 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா 50,000/- ரூபாயும் வழங்கப்படும் என்று  அதிமுக  பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிவித்தைத் தொடர்ந்து, மொத்தம் 7 கோடியே 34 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், அண்மையில் வட சென்னை தெற்கு, வேலூர் கிழக்கு, திருப்பூர் புறநகர், புதுக்கோட்டை, மதுரை புறநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 7 கழக உடன்பிறப்புகள் மரணமடைந்த செய்தியை அறிந்த  அதிமுக  பொதுச் செயலாளர் ஜெயலலிதா  மிகுந்த மன
வேதனை அடைந்ததோடு, மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து, குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்

அதன்படி, கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பாக  நேற்று
1) கழக அவைத் தலைவர் . இ. மதுசூதனன் அமைச்சர்கள் வளர்மதி,  எஸ். கோகுல இந்திரா, மாணவர் அணிச் செயலாளர் திரு. எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி., வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்  நா. பாலகங்கா  ஆகியோர் , அரசியல் எதிரிகள் பரப்பிய வதந்திகளைக் கேட்டு மனம் வெதும்பி ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட வட சென்னை தெற்கு மாவட்டம், எழும்பூர் பகுதி 77-ஆவது தெற்கு வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி . ராஜா இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய மனைவி திருமதி விஜயலட்சுமியிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்.

2) அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவருமான . அ. தமிழ்மகன் உசேன், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பச்சைமால், நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்; நம் அரசியல் எதிரிகள் பரப்பிய வதந்திகளைக் கேட்டு மனம் வெதும்பி விஷம் அருந்தி தன் உயிரை மாடீநுத்துக் கொண்ட நாகர்கோவில் நகர 21-ஆவது வார்டைச் சேர்ந்த . சலீம் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய மகன் திரு. சரபுதீனிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்.

3) அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும் சட்டபேரவைத்துணைத்தலைவர்  . பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள்; கழகப் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த சங்கராமநல்லூர் பேரூராட்சி 8-ஆவது வார்டைச் சேர்ந்த பத்மாவதி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய கணவர் திரு. பெருமாள்சாமியிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்.

4) மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான  செல்லூர் கே. ராஜு, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்  ம. முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ., மதுரை மாநகராட்சி மேயர். ராஜன் செல்லப்பா மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், அரசியல் எதிரிகள் பரப்பிய பொடீநுச் செய்திகளைக் கேட்டு மன உளைச்சல் காரணமாக மாரடைப்பால் மரணமடைந்த மதுரை புறநகர் மாவட்டம், அவனியாபுரம் பகுதி, 55-ஆவது வட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்  லெனின் பாண்டி, தீக்குளித்து மரணமடைந்த இவருடைய மனைவி  அழகிமீனா ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, குடும்ப நல நிதியுதவியாக தலா 3,00,000/- ரூபாய் வீதம் 6,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை அவர்களுடைய பிள்ளைகளிடம் வழங்கினார்கள்.

5) வேலூர் மேற்கு மாவட்ட  அதிமுக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான தி. வீரமணி, வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக  செயலாளர் . பார்த்திபன், வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயிணி மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்; கழகப் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த காட்பாடி வடக்கு பகுதி, 3-ஆவது வட்ட அதிமுக  மேலமைப்புப் பிரதிநிதி  கனகவிஸ்வலிங்கம் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய மனைவி மோகனாவிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்.

6) புதுக்கோட்டை மாவட்ட அதிமுக  செயலாளரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்; கழகப் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த அன்னவாசல் ஒன்றியம், கோத்திராப்பட்டி ஊராட்சி, மலைக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  ஏ. செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய மனைவி பானுமதியிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்.

இன்று மட்டும், அண்மையில் மரணமடைந்த 7 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம்  வீதம் 21 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டது.

இதுவரை, 251 பேர்களின் குடும்பங்களுக்கு 7 கோடியே 53 லட்சம் ரூபாயும்; 4 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாயும்; ஆக மொத்தம் 7 கோடியே 55 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகளை தங்களுடைய இல்லங்களுக்கே அனுப்பி வைத்து நிதியுதவியினை வழங்கச் செய்த, ஏழை, எளிய மக்களின் கண்கண்ட காவல் தெய்வம், தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு , நிதியுதவியினைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினை கண்ணீர் மல்க தெரிவித்துக் கொண்டனர். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து