முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு: மே 29-ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

புதன்கிழமை, 20 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பத்து லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள் மற்றும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் உள்ளிட்ட மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதியுள்ளனர்.  இத்தேர்வின் .விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் புள்ளி விவர மையத்தில் பதிவு செய்யப்பட்டு ஒரு முறைக்கு பல முறை மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு  வெளியிடப்படுகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி  அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை கல்லூரிச் சாலை டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவு வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் கீழ்க்காணும் இணையதளங்களில் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்   மாணவமாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்  என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. மே 22 முதல் 27-ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தாள்கள் (மொழிப்பாடம், ஆங்கிலம்) கொண்ட பாடத்துக்கு கட்டணம் ரூ.305, ஒரு தாள் கொண்ட பாடத்துக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ரூ.205.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத் தித்தான் மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். பள்ளி தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 29 முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.

பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர் களும் தேவைப்பட்டால் ஜூன் 4 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித் துள்ளார். . இந்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் கடந்த ஆண்டை விட 2 நாட்களுக்கு முன்னதாக வெளியாகின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து