முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியை ஆராய புதிய விண்கலம் அமெரிக்க விமானப்படை ரகசியமாக ஏவியது

வியாழக்கிழமை, 21 மே 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: விண்வெளியை ஆய்வு செய்வதற்காக புதிய விண்கலம் ஒன்றை அமெரிக்க விமானப்படை ரகசியமாக விண்ணில் ஏவியது. ஆளில்லாத இந்த விண்கலம் சுமார் 2 ஆண்டுகள் வரை விண்வெளியில் தங்கி ஆய்வுகள் நடத்தும் என தெரிகிறது.  விண்வெளிக்கு சென்று ஆய்வு நடத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் ஷட்டில் எனப்படும் விண்கலங்களை அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தது. இதுபோல் 4 விண்கலங்கள் அமெரிக்க வசம் இருந்தன.

இதில் இரண்டு விண்கலங்கள் விபத்தில் சிக்கி வெடித்து சிதறின. மற்று 2 விண்கலங்களும் இனிமேல் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழசாகி விட்டதால் அவை தரையிறக்கப்பட்டன. பழைய மாடல் விண்கலங்களுக்கு பதிலாக புதிய விண்கலங்களை தயாரிக்கும் பணியை அமெரிக்காவில் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முடுக்கிவிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், விண்வெளியில் ஆய்வு செய்வதற்காக ரகசிய விண்கலம் ஒன்றை அமெரிக்க விமானப் படை நேற்று  முன்தினம் விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.

இது போன்ற ரகசிய விண்கலம் விண்ணில் ஏவப்படுவது இது 4 வது முறை என நாசா வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளில்லாத இந்த விண்கலங்களை பூமியில் இருந்தபடி இயக்கலாம். இந்த புதிய விண்கலம் 29 அடி நீளம் கொண்டதாகும். நாசாவின் பழைய ஷட்டில் விண்கலத்தைவிட சிறிதாகும். இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்த புதிய வகை ராக்கெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். புதியவகை எரிபொருள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம் என் அமெரிக்க விமானப்படை செய்தி தொடர்பாளர் கிரிஸ் ஹொய்லர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வேறு விவரங்கள் எதுவும் அவர் வெளியிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து