முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடன் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னேற்ற பாதையில் இந்தியா: வி.கே.சிங்

வியாழக்கிழமை, 21 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சீனாவுடன் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா முன்னேற்ற நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சீனா,மங்கோலியா,தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது, பிரதமரின் தற்போதைய வெளிநாட்டு பயணம் கிழக்கு நோக்கிய பார்வை என்பதில் இருந்து கிழக்கில் செயல்படுவது என்கிற வகையில் இந்தியாவின் வெளிநாட்டுகொள்கையாக இருக்கிறது.

பிரதமர் மோடியின் சீன பயணம் வெற்றிகரமாக இருந்துள்ளது,இரு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பிற்கு பின்னர் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குதீர்வு காண்பது எளிதாக இருக்கும்.எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவும் சீனாவும் முன்னோக்கி செல்கின்றன. இந்திய வரைபடத்தை காட்டும் போது அதில் அருணாச்சல பிரதேசமும் ஜம்மு காஷ்மீரும் இடம் பெறாத வகையில் சீனாகாட்டுகிறது. இதுகுறித்து ராஜிய ரீதியில் இந்தியா தெரிவித்து இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து