முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலில் பத்தாம் வகுப்புத்தேர்வில் அரசுப்பள்ளிகள் சாதனை-

வியாழக்கிழமை, 21 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலில்  கல்வித்துறையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால் பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு அரசு பள்ளிகள் 89.2 தேர்ச்சி பெற்று பெரும் சாதனை படைத்திருக்கின்றன. இந்த தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழக அரசு தனது பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி அளித்ததன் விளைவாகவும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளாலும், இந்த ஆண்டு அரசுப்பள்ளிகள் 89.2 ;சதவீதம்  தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன.  அதேபோல் இக்கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை விட மாணவிகள் 6.9 கூடுதலாக தேர்ச்சி  பெற்றுள்ளனர்தற்போது வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 606 பள்ளிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

தற்போது வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் 97.98 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் 97.62 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு, 358 அரசு பள்ளிகள் 100 சதவிதம் தேர்ச்சி பெற்றன. தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கியுள்ள பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் இச்சாதனை படிப்படியாக 2013 ஆம் ஆண்டில் 453 பள்ளிகளாகவும், 2014 ஆம் ஆண்டில் 558 பள்ளிகளாகவும் அதிகரித்தன.  இக்கல்வி ஆண்டில், ஆசிரியர்களுக்கு  பயிற்சி அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்ததன் மூலமாக  1164 அரசு பள்ளிகள் 100 சதவித தேர்ச்சியை பெற்றுச்  சாதனைப்  படைத்துள்ளன.

இக்கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 2,539 மாணவர்கள் கணிதப் பாடத்தில் 100 சதவிகித தேர்ச்சியும், 27,157 மாணவர்கள் அறிவியல் பாடத்தில் 100 சதவிகித தேர்ச்சியும், 10,408 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் 100 சதவிகித தேர்ச்சியும் பெற்றிருக்கின்றனர். இவ்வாறு  அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து