முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

வியாழக்கிழமை, 21 மே 2015      உலகம்
Image Unavailable

புது டெல்லி - மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவன் தாவூத் இப்ராஹிம். நிழல் உலக தாதாவான இவன் மும்பை குண்டு வெடிப்புகளை நடத்தி விட்டு பாகிஸ்தானுக்கு தப்பிச்சென்று விட்டான். தாவூத் இப்ராஹிமை ஒப்படைக்கும் படி இந்திய பல தடவை கோரிக்கை விடுத்தது. ஆனால் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் கராச்சி நகரில் தாவூத் இப்ராஹிம் சொகுசு பங்களாவில் வசித்து வருவதை மத்திய உளவுத்துறை உறுதிய செய்தது.

தாவூத் இப்ராஹிம் அங்கிருந்து காரில் புறப்பட்டு செல்லும் படக்காட்சிகளும் வெளியிடப்பட்டன.கராச்சியில் எந்த பகுதியில் தாவூத் இப்ராஹிமின் சொகுசு பங்களா உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் உளவுத்துறை ஈடுபட்டது. நீண்ட வேட்டைக்குப் பிறகு அவரது பங்களாவை உளவுத் துறையினர் கண்டுபிடித்தனர். அது மட்டுமின்றி அவனுக்கு இந்தியா, துபாய், மற்று் ஐரோப்பிய நாடுகளிலும் பல ஆயிரம் கோடிக்கு சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவனது அனைத்து சொத்துக்களையும் முட்ககும் நடவடிக்கைகளை மத்திய அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது. இந்தியாவில் பினாமி பெயர்களில் அவன் வைத்திருக்கும் சொத்துக்கள் பற்றி ஆய்வு நடந்து வருகிறது. அந்த தகவல்கள் உறுதிப் படுத்தப்பட்டதும் அலாக்கத்துறை அதிகாரிகள் வேட்டையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் ஏற்கெனவே தாவூத் இப்ராஹிம் மின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது அவனது வெளிநாட்டு சொத்துக்களுக்கும் அமலாக்கத்துறை குறி வைத்துள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளின் உதவியை இந்தியா நாடி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து