முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்புத்தேர்வில் சென்னை மாணவிகள் அனு கீர்த்தனா, ,ஷீவானி சாதனை

வியாழக்கிழமை, 21 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அனுகீர்த்தனா , ஷீவானி ஆகிய இரு மாணவிகள் மாநில அளவில் முதலிடங்களை பெற்று சாதனை படைத்திருக்கின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடங்களை பிடித்துள்ளனர். இவர்களில் சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அனுகீர்த்தனா மற்றும் ஷீவானியும் இடம் பெற்றுள்ளனர்.மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி அனுகீர்த்தனா கூறியதாவது:– மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் பேருஉதவியாக இருந்தது. எதிர்காலத்தில் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறேன். எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொண்டு படித்தால்தான் நன்றாக புரியும்.

பள்ளியில் அடிக்கடி நடத்தப்படும் தேர்வுகளும் இந்த சாதனைக்கு முக்கிய காரணமாகும். பிளஸ் ஒன்னில் நான் பயோ மேத்ஸ் எடுத்து எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார். முதலிடம் பெற்ற இன்னொரு மாணவி ஷிவானி கூறியதாவது:–மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அளவுக்கு சாதிப்பதற்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் கை கொடுத்தது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நன்றாக கவனித்து படித்தேன். பள்ளியில் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்வுகளும் பயனுள்ளதாக இருந்தது.

நேரம் கிடைக்கும்போது டி.வி.யும் பார்ப்பேன். ஆனால் அது எனது படிப்பை பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். டாக்டராக ஆசைப்படுகிறேன். பத்தாம் வகுப்பு  தேர்வு முடிவுகளில் சென்னை, , முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, மிகப்பெரிய  சாதனையை செய்துள்ளது.இந்த பள்ளியில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் ஆர்.அனு கீர்த்தனா, ஷிவானி இருவரும் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களும் மற்ற அனைத்துப் பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இதே பள்ளியில் பிரெஞ்சு சமஸ்கிருதம் மொழியை முதல் பாடமாக எடுத்து படித்த மேலும் 5 பேர் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:–1. மஞ்சரி (பிரெஞ்சு)2. ஷர்மிளா (பிரெஞ்சு)3. அபிநயா (பிரெஞ்சு)4. லஸ்யா (சமஸ்கிருதம்)5. ஹரீஸ் (சமஸ்கிருதம்)வேலம்மாள் பள்ளி மாணவ –மாணவிகளில் 8 பேர் தலா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2–வது இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:–1. கீர்த்தி லட்சுமி2. ரேவதி3. பிரதீப்குமார்4. சீனிவாசன்5. உமேஸ்வரன்6. நிஷாஸ்ரீ7. தினகர்8. சந்திரசேகரன்.

இதே பள்ளியில் படித்த 12 பேர் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3–வது இடத்தைப் பிடித்தனர். சாதனை படைத்த இந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், துணை முதல்வர் பொன்மதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி அனுகீர்த்தனா கூறியதாவது:– மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் பேருஉதவியாக இருந்தது. எதிர்காலத்தில் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறேன். எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொண்டு படித்தால்தான் நன்றாக புரியும். பள்ளியில் அடிக்கடி நடத்தப்படும் தேர்வுகளும் இந்த சாதனைக்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

முதலிடம் பெற்ற இன்னொரு மாணவி ஷிவானி கூறியதாவது:– மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அளவுக்கு சாதிப்பதற்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் கை கொடுத்தது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நன்றாக கவனித்து படித்தேன். பள்ளியில் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்வுகளும் பயனுள்ளதாக இருந்தது. நேரம் கிடைக்கும்போது டி.வி.யும் பார்ப்பேன். ஆனால் அது எனது படிப்பை பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். டாக்டராக ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஷிவானி கூறினார். சூரப்பட்டு வேலம்மாள் பள்ளி மாணவி எஸ்.அனுகீர்த்தனாவும் மாநில அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து