முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா வழக்கில் வெற்றித்தீர்ப்பு தங்கத்தேர் இழுத்தார் ஒ.பி.எஸ்

வியாழக்கிழமை, 21 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தனது வழக்கில் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து சென்னை ராஜா அண்ணாமலைப்புரம் ஐயப்பன் திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்தார் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்ச்செல்வம் சென்னை ராஜா அண்ணாமலை புரம் ஐயப்பன் திருக்கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

சுமார் அரைமணி நேரம் அவர் ஐயப்பன் கோவிலில் அமர்ந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். இதைத்தொடர்ந்து தங்கத்தேர் இழுத்து , அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக மாணவர் அணி மாநிலச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான  எஸ்.ஆர்.விஜயகுமார். அண்ணா தொழிற்சங்க தலைவர் தாடி.ம.ராசு, தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் விருகை ரவி, வேளச்சேரி எம்.கே. அசோக், கவுன்சிலர் ராஜலட்சுமி, அதிமுக மீனவர் அணித்துணை செயலாளர் ரமேஷ்  ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் பாண்டுரங்கன் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து