முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா அறிவித்தபடி இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம்

வியாழக்கிழமை, 21 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்தது முதல் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வராமல் இருந்த அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் இன்று  பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இன்று பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்றம் இம்மாதம் 11-ந் தேதி ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக போயஸ் கார்டனில் அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று ஆவலோடு அதிமுகவினர் எதிர்பார்த்தனர்.

அவர்களின் ஆவலை திருப்தி படுத்துவதற்கு முன்னோட்டமாக இன்று காலை 7 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுவார். இதையடுத்து  ஜெயலலிதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதம் கவர்னரிடம் கொடுக்கப்படும் . இன்று 8 மாதத்திற்கு பின் போயஸ் கார்டனை விட்டு வெளியே வந்து ஜெயலலிதாமக்களை சந்திக்கிறார்.

இன்றைய தினம் பெரியார், அண்ணா, மற்றும் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலையணிவித்து மரியாதை செய்ய இருக்கிறார். வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.அதனால் அ,தி,மு.க.வினர்  உற்சாகம் அடைந்துள்ளனர், அவரைவரவேற்க ஏற்பாடுகளைசெய்து வருகின்றனர்.ஜெயலலிதா வருகையையொட்டி போயஸ் தோட்டத்திலிருந்து அண்ணாசாலைமுழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்பு  செய்ய்ப்படுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து