முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் நக்வியின் பேச்சுக்கு முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி கட்ஜு கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்ற மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பேச்சுக்கு சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் காட்டமாக பதிலளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிய நக்வி, மாட்டுக்கறி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்  முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: நான் ஒரு இந்து. நான் மாட்டு இறைச்சி சாப்பிட்டிருக்கிறேன்.. மீண்டும் மாட்டு இறைச்சி சாப்பிடுவேன். மாட்டு இறைச்சி சாப்பிடுவதில் என்ன தவறு? உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் அனைவரும் பாவம் செய்தவர்களா? என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து