முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சையை கிளப்பிய எம்.பி.க்கள் விளக்கம் அளிக்க வேண்டும்: பாஜ தலைவர் அமித் ஷா

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - அநாகரிகமாக விமர்சனம் செய்யும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில், அநாகரிகமாக பேசுகிற பாரதிய ஜனதா கட்சியினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

இத்தகைய விமர்சனங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.நோட்டீஸ் அனுப்பி பெறப்படுகிற விளக்கங்கள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆராய்ந்து வருகிறது என்றார். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தது முதல் அக்கட்சி எம்.பி.க்கள் பலரும் மிக மோசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக சாக்ஷி மகாராஜ், கிரிராஜ்சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி என பலரும் இந்தப் பட்டியலில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து