முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவல் மோதலுக்கு முற்றுப்புள்ளி டெல்லியில் கவர்னருக்கு முழு அதிகாரம்: மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே அதிகாரப்போட்டி ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தை நடத்தும் உத்தரவுகளைப் பிறப்பிப்பது யார் என்பதில் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் டெல்லி தலைமை செயலாளர் சர்மா 2 வாரகால விடுப்பில் அமெரிக்கா சென்றதால், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி யான சகுந்தலா கேம்லினை, தலைமை செயலாளர் பொறுப்பில் கவர்னர் நியமித்தார். இதற்கு முதல்வர் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

தலைமை செயலாளரை நியமனம் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று கூறிய அவர், சகுந்தலா கேம்லினை பதவி நீக்கம் செய்து அறிவித்தார். அதுமட்டுமின்றி சகுந்தலா நியமன உத்தரவில் கையெழுத்திட டெல்லி மாநில அரசின் முதன்மை செயலாளரையும் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அவர்கள் இருவரையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைத்துப் பேசினார். என்றாலும் யாருக்கு அதிகாரம் உள்ளது? என்பது சமூக தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தமது ஒப்புதல் இல்லாமல் டெல்லி அரசு பிறப்பித்த அனைத்து உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், நியமன உத்தரவுகளை கவர்னர் நஜீப் ஜங் கடந்த புதன்கிழமை அதிரடியாக வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், டெல்லியில் சுதந்திரமாக ஆட்சி நடத்த ஒத்துழைப்பு தாருங்கள், என்று கூறியிருந்தார்.

ஆனால் பிரதமர் மோடி அந்த கடிதம் பற்றி கண்டு கொள்ளவில்லை. மாறாக பாஜ மூத்த மத்திய மந்திரிகள் அனைவரும் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், தனக்கு அதிகாரம் இல்லை என்று கெஜ்ரிவால் மக்களை திசை திருப்புவதாக குற்றஞ்சாட்டினார்கள். இந்த நிலையில் யூனியன் பிரதேச அரசில் கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு அதிகாரம் உள்ளதா? என்ற சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக கெஜ்ரிவால் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் சர்ச்சை நீடித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கவர்னருக்கே அதிகாரம் உள்ளது, என்று மத்திய உள்துறை நேற்றி அதிரடியாக அறிவித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே முக்கியப் பணிகளில் கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதிகாரிகள் நியமனம், பொது உத்தரவு, போலீஸ் மற்றும் நிலம் மீது முடிவு எடுக்கும் பொறுப்பும், அதிகாரமும் கவர்னருக்கே உள்ளது.

அதிகாரிகளை நியமனம் செய்யும் போது, அது தொடர்பாக கவர்னர், முதல்வருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. தேவைப்பட்டால் முதல்வரிடம் கவர்னர் கருத்து கேட்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விளக்கம் அரசிதழிலும் உடனடியாக வெளியிடப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நேர்மையான முறையில் நடந்து கொள்ளவில்லை என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கவர்னருக்கே முழு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு அறிவித்து இருப்பது பற்றி முதல்வர் கெஜ்ரிவாலிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூரியதாவது: டெல்லியில் தனது அரசின் செயல்பாடுகளைப் பார்த்து பாஜக அரசி பயப்படுகிறது. குறிப்பாக ஊழலுக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அவர்களை அச்சுறுத்தியுள்ளது. எனவே தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரம் தரமறுக்கிறார்கள். முதலில் சட்டசபை தேர்தல் மூலம் டெல்லியில் பாஜ தோல்வியை சந்தித்தது. இப்போது அதிகாரம் தர மறுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம் இரண்டாவது தடவையாக பாஜக தோல்வியை கண்டுள்ளது. இவ்வாறு முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து