முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா இன்று முதல்வராக பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை- தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து நேற்றுமதியம் கவர்னர் ரோசைய்யாவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியும், புதிய அமைச்சரவை பட்டியலையும் ஜெயலலிதா கொடுத்தார். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது. ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.உடல் நலமில்லாமல் இருக்கும் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட சிலர் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கவர்னர் ரோசய்யாவை சந்தித்த ஜெயலலிதா புதிய அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்க இருப்பதையொட்டி, தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல் அமைச்சராக பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, கவர்னரை நேரில் சந்தித்து பதவியேற்க உரிமை கோருவதற்காகவும், புதிய அமைச்சரவை பட்டியலை கவர்னரிடம் அளிப்பதற்காகவும், நேற்று மதியம்சரியாக 1.28 மணிக்கு போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள இல்லத்திலிருந்து ஜெயலலிதா புறப்பட்டார்.தொடர்ந்து கோட்டூர் புரம் வரசக்தி விநாயகர் கோவிலில் வழிபட்டார்.

போயஸ் தோட்டத்திலிருந்து கிளம்பிய ஜெயலலிதாவுக்கு வழிநெடுக அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் அமர்ந்திருக்கும் வாகனத்தை நோக்கி தொண்டர்கள் மலர்கள் தூவியும், பூரண கும்ப மரியாதை செலுத்தியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவர்களின் மரியாதையை ஜெயலலிதா இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து கவர்னர் மாளிகை சென்ற ஜெயலலிதா ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ரோசய்யா வரவேற்றார். இதைதொடர்ந்து புதிய அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதாவழங்கினார்.தொடர்ந்து கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார்.

20 நிமிடங்கள் ஆளுநர் மாளிகையில் இருந்தார் ஜெயலலிதா திய அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பா. ப.மோகன், வளர்மதி, பி.பழனியப்பன், ஆர்.காமராஜ். பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, எஸ்.சுந்தரராஜ், எஸ்.பி.சண்முகநாதன், என்.சுப்பிரமணியன், கே.ஏ.ஜெயபால், பி.தங்கமணி, வி.செந்தில்பாலாஜி, எம்.சி.சம்பத், கோகுல இந்திரா, செல்லூர் கே.ராஜூ, முக்கூர் என். சுப்பிரமணியன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி, தோப்பு வெங்கடாச்சலம், டி.பி. பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 28 பேர் பதவியேற்கிறார்கள்.ஓ.பன்னீர்செல்வம் மந்திரி சபையில்டம் பெறிருந்த அனைவரும் இடம்பெறுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு  அண்ணாசாலை ஸ்பென்சர் வணிக வளாகம் சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர்.  உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை  செய்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள பெரியார் சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு ஜெயலலிதா திரும்பினார்.    முன்னதாக ஜெயலலிதாவை வரவேற்க, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வழி நெடுகிலும் தொண்டர்கள் குவிந்து இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலிதாவை வரவேற்கும் விதமாக கட்சியின் நிர்வாகிகளிலும் ஆங்காங்கே  ஜெயலலிதாவை வாழ்த்தி பேனர்கள் அமைத்து இருந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும்  சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  வழிநெடுக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்றனர்.

ராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ஆடல்– பாடல், இன்னிசை கச்சேரிகள், பலவகை மேளங்கள் வழிநெடுக இசைக்கப்பட்டன. இதனால் ஜெயலலிதா சென்ற பாதை முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருந்தது.வழிநெடுக திரண்டிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவை பார்த்ததும் 'அம்மா வாழ்க' என்று உற்சாகத்தில் கோஷமிட்டனர். தொண்டர்களின் உற்சாகத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அவர்களை பார்த்து இரு விரல்களை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

முதல்வர் பதவியேற்பு
 முதல்வர் பதவியேற்புக்கான அனைத்து ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா  நடைபெறவுள்ளது.இன்று காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும். ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், சில மாநில முதல்வர்களளும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து