Idhayam Matrimony

இந்திய.சீன உறவுக்கு எல்லைப்பிரச்சினை முக்கியமானது பாதுகாப்பு ஆலோசகர் தோவல் பேச்சு

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லியில் கே.எப் ருஸ்தம்ஜி ஆண்டு உரை நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) நடத்தியது. இந்த படை பிரிவின் முதல் டைரக்டர் ஜெனரல் ருஸ்தம்ஜி ஆவார். அவர் 1960ம்ஆண்டு ஓய்வு பெற்ற பின்னர் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக  நியமிக்கப்பட்டார் .பத்ம விபூஷன் விருது பெற்ற ஒரே போலீஸ் அதிகாரி ருஸ்தம்ஜி ஆவார்.அவரது பிறந்த தினத்தை யொட்டி நடந்த இந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியா,சீனா இடையிலான எல்லைப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியமானதாக இருக்கிறதுஇதனால் சீனாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.நாம் சீன எல்லையை பகுதியை வேறுபட்ட கோணத்தில் பார்க்க வேண்டும்.இந்தியா எல்லை தரப்பில்3ஆயிரத்து 4880கிலோ மீட்டர் பகுதி உள்ளது.இந்த பகுதி மலைகள்,சமவெளிகள் பனிப்பகுதி என பல்வேறு நிலைகளில் இருக்கிறது.எல்லைப்பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவுடனான உறவு முன்னோக்கிய நிலையில் இருக்க வேண்டும்.அதற்காக இந்தியா தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து