முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு:

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

 வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று காலை 7 மணிக்கு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முதலவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட 144 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா , அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் அறிந்த தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி மகிழ்ந்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க அவர் கட்சித்தலைவர் ஆனதை வரவேற்றனர்.

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் நேற்று அதிகாலை 7 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க நேற்று அதிகாலை 5.45 மணிக்கே எம்.எல்.ஏக்கள் வரத்தொடங்கினர். 6.25 மணிக்கு முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வந்தார். அவரை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் 144 பேரும் வந்தனர் .காலை 7 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் எழுந்து  அதிமுக சட்டமன்றக்கட்சித்தலைவராக  அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா பெயரை   முன்மொழிந்தார். அதனை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வழிமொழிந்தார். உறுப்பினர்கள் அனைவரும் இத்தீர்மானத்தை  வரவேற்று பலத்த கரவொலி எழுப்பினர். புரட்சித்தலைவி அம்மா வாழ்க என வாழ்த்துக்கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற அதிமுக அலுவலகத்தில்  பல்லாயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். அதிமுக சட்டமன்றக்கட்சித்தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் தொண்டர்கள் அம்மா வாழ்க முதல்வர் புரட்சித்தலைவி வாழ்க என வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.பேண்ட் வாத்தியங்கள் முழங்கின. ஆண்களும் பெண்களும் நடனமாடி ஜெயலலிதா சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதற்கிடையில் அதிமுக தலைமைக்கழகம் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று அதிகாலை 7 மணிக்கு நடைபெற்றது., அதிமுக  அவைத் தலைவர்  இ. மதுசூதனன்  தலைமையில் இந்த கூட்டம்  நடைபெற்றதுகூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கட்சியின் தலைவராக, கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் கழக சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே   கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை, அவரிடம் சொல்வதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் சென்றார்.
போயஸ்கார்டனில் ஜெயலலிதா சந்தித்த பன்னீர்செல்வம், பின்னர் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.  ஆளுநர் ரோசய்யாவிடம்  தனது ராஜினாமா கடிதத்தை பன்னீர்செல்வம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக  முதலமைச்சராக பதவியேற்க வருகை தரும்படி மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்

இதைத்தொடர்ந்து  முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் , மக்களின் முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஒ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மீண்டும் முதல்வராக பதவியேற்க ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.

 ஆளுநரின் அழைப்பை ஏற்று கிண்டி ராஜ்பவன் புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   போயஸ்கார்டனே கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு  நேவிழாக்கோலம் பூண்டிருந்தது.    அதிமுக மகளிர் அணி செயலாளர் சசிகலா தலைமையில் மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.கவுன்சிலர் ஆர்.கே.நகர் அஞ்சுலட்சுமி, குழந்தைகள் உரிமை ஆணையத்தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, சைதை எம்.எல்.ஏ செந்தமிழன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தி வரவேற்றனர். . பேண்டு வாத்தியங்கள் முழங்க ,அம்மா வாழ்க  என்று வாழ்த்து கோஷங்கள் முழங்கின.

 . இதற்கிடையே நேற்று பகல் 1-33 மணிக்கு கிண்டி ராஜ்பவன் சென்றார். ஆளுநர் மாளிகையில் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா , ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.ஆளுநர் ரோசய்யாவிடம் அமைச்சரவை பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு  ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா , சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

போயஸ் தோட்டத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும் அண்ணா சாலையிலும் வழிநெடுக ஜெயலலிதாவை வரவேற்று தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா செல்லும் பாதைகளில் நேற்று  முன்தினம்  மாலை முதலே போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். எம்ஜிஆர், அண்ணா, பெரியார் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 


தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று  பொறுப்பேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள் விழா முடிவடையும். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழா முடிந்ததும் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து