முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 21 பேர் பலி

சனிக்கிழமை, 23 மே 2015      உலகம்
Image Unavailable

ரியாத் - சவுதி அரேபியாவில் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.சவுதி அரேபியாவில் கிழக்கு மாகாணத்தில் குவாதிப் பகுதியில் குதே என்ற இடத்தில், ஷியா பிரிவினரின் அலி இபின் அபிதலேப் என்ற மசூதி உள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று முன் தினம்  அங்கு தொழுகை நடந்தது. அதில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்துக்குள் சன்னி பிரிவு தற்கொலை படை தீவிரவாதி புகுந்தான்.

பின்னர் அவன் தனது இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தான்.இதனால் அங்கு மசூதி கட்டிடம் இடிந்தது. பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இத்தாக்குதலில் 21 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். மேலும் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் பெயரை படத்துடன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த தீவிரவாதியின் பெயர் அபு அமீர் அல்-ரஸ்டி. இதன் மூலம் சவுதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முதன்முறையாக தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக சவுதி அரேபியா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து