முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது

சனிக்கிழமை, 23 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி: திருப்பதி மலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் ஆந்திரா, தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தாலும், வார விடுமுறை என்பதாலும் பக்தர்கள் வருகை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர். வைகுண்டம் கியுகாம்பளக்சில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. கோவிலுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை காணப்பட்டது.

தர்ம தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆனது. கால்நடையாக வந்த பக்தர்கள் 8 மணி நேரமும், 300 ரூபாய் தரிசன டிக்கெட் பக்தர்கள் 3 மணி நேரமும் தரிசனத்துக்கு காத்து நின்றனர். நேற்று முன் தினம் முகூர்த்தநாள் என்பதால் திருமலையில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கல் நடந்தது.  திரும்பிய திசையெங்கு புதுமண தம்பதிகளாக காணப்பட்டனர். இதன் காரணமாக பலருக்கு தங்கும் அறை கிடைக்கவில்லை. அதோடு புரோகிதர் தட்டுப்பாடும் நிலவியது. பலர் தாங்கள் அழைத்து வந்த புரோகிதர்களை கொண்டு ஆங்காங்கே திருமண சடங்குகளை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து