முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக ஆட்சிக்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் இந்து பெண் தலைவர் பேச்சால் சர்ச்சை

சனிக்கிழமை, 23 மே 2015      அரசியல்
Image Unavailable

ஜலந்தர - மத்தியில் பாஜக ஆட்சி முடிவுக்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என இந்து பெண் தலைவர் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜ தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இருந்த போதிலும் தற்போது அந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே, இதற்கு சட்டரீதியான வழிமுறைகளை காண வேண்டும் என்ற நிலை உள்ளது.

ஆனால், நீதிமன்றத்தை அவமதிப்பது போல இந்து தலைவர்கள் அடிக்கடி இதுகுறித்து பேசி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது இந்து பெண் தலைவர் சாத்வி பிராச்சியின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஷ்வ இந்து பரிஷத்தின் இந்து பெண் தலைவர் சாத்வி பிராச்சி பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

பாஜ தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு கால ஆட்சிக்குள் அங்கு ராமர்கோயில் நிச்சயம் கட்டி முடிக்கப்படும். இதுகுறித்து இன்னும் ஓரிரு தினங்களில் ஹரித்துவாரில் நடைபெறும் கூட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் முடிவு செய்யும் என்றார். தற்போது சாத்வி பிராச்சியின் அயோத்தி பேச்சு கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து