முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய ஊழல் தடுப்பு மற்றும் மத்திய தகவல் ஆணையங்களுக்கு தலைவர்கள் நியமனத்தில் முடிவு எடுக்கப்படவில்லை

சனிக்கிழமை, 23 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி)மற்றும் மத்திய தகவல் ஆணையங்களுக்கு (சிஐசி)தலைவர்கள் நியமனம் செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு கமிட்டி இன்னும் முடிவு எடுக்கவில்லை.  மத்திய ஊழல் தடுப்பு ஆணைய ஆணையர் பதவியும் மத்திய தகவல் ஆணைய ஆணையர் பதவியும் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த ஆணையங்களுக்குதலைவர்களை நியமனம் செய்வதுத்தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு கமிட்டிகள் நேற்று கூடின இந்த கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட இரு பதவிகளுக்கும் யாரை நியமனம் செய்வது என்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை.
எனவே இது தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவிசி மற்றும் சிஐசி பதவிகளுக்கு பொருத்தமான அதிகாரியை நியமனம் செய்வதுத்தொடர்பாக தேர்வு குழு கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக உள்ள மல்ரலிகார்ஜூன் கார்கே ஊழியர் விவகாரத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தலைமை தகவல் ஆணையர்(சிஐசி) பதவி கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருக்கிறது.இந்த தகவல் ஆணையத்தின் தலைவராக இருந்த ராஜீவ் மாத்துார் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத்தவிர சிஐசியில் 3தகவல் ஆணையர் பதவிகளும் காலியாக இருக்கின்றன. மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சிவிசி ஆணையர் தலைவராக இருப்பார். மேலும் அந்த ஆணையத்தில் 2 ஆணையர்களும் உள்ளனர். தற்போது இந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் பொறுப்பு ஆணையராக ராஜீவ் உள்ளார்.அவர் மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பிரிவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆவார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து