முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக சாதனைகள், காங்கிரசின் தோல்விகள் - அருண் ஜெட்லி

சனிக்கிழமை, 23 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சாதனைகளையும் காங்கிரசின் தோல்விகளையும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பட்டியலிட்டார்.நரேந்திர மோடி தலைமையிலானகூட்டணி அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் தற்போதைய அரசின் சாதனைகளை கூறினார். வெளிப்படைத்தன்மையுடனும்  ஊழலற்ற நிர்வாகம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் தற்போதைய பாஜ ஆட்சி கவனம் கொண்டுள்ளது என்று ஜெட்லி தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலாளிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தியது.ஆனால் தற்போது மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடைபெறுகிறது.கடந்த 12 மாதங்களாக ஆட்சி நடத்தும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையுடனும் ஊழலற்ற நிர்வாகம் கொண்டதாகவும் உள்ளது. தற்போதைய அரசு விரைவாக முடிவு எடுப்பதில் கவனம் செலுத்துகிறது.பாஜ அரசு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில்  கவனம் செலுத்துவதாக இருக்கிறது.முந்தைய ஆட்சியாளர்களின் 10ஆண்டு ஆட்சி காலத்தில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது இல்லை.

ஆனால் சரக்குமற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மற்றும்2013ம்ஆண்டு நில கையக சட்ட திருத்தம் ஆகியவற்றுக்கு தடை ஏற்படுத்துபவர்களாக காங்கிரசார் உள்ளனர்.மோடி தலைமையிலான அரசு தடைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.ஆனால் மேற்குறிப்பிட்ட 2மசோதாக்கள் மட்டும் நிறைவேறாமல் இருக்கின்றன.அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பாஜக அரசு விரும்புகிறது. கூட்டாட்சி ஒத்துழைப்பை பாஜ அரசு பயன்படுத்தி உள்ளது. இதனால் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி அரசு நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்கள் நிறைவேறுவதற்கு பிராந்திய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.கடந்த 12 மாதங்களில் பிரதமர் மோடி 18நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.இதனால் உலக வரைபடத்தில் இந்தியாவை மோடி இடம்பெறச்செய்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து