முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களில் மழை: காற்றாலை மூலம் அதிகபட்ச மின்சாரம்

சனிக்கிழமை, 23 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தென் மாவட்டங்களில் மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் காற்றாலைகளால் இந்த ஆண்டு அதிகபட்சமாக மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது என்று காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் நம்புகின்றனர். தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரம் அனல்மின் நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் உட்பட பல்வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் புனல் மின்நிலையங்களும், காற்றாலைகளும் மின்சார உற்பத்தி செய்வதற்கு இயற்கையின் ஒத்துழைப்பும் முழுமையாக தேவைப்படுகிறது. குறிப்பாக காற்று உள்ள சீசனில் மட்டுமே காற்றாலைகளும், மழைக்காலங்களில் புனல் மின்நிலையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட மின்சார உற்பத்தியை எட்ட முடியும். இருந்தாலும் காலநிலை மாற்றத்தால் மின்உற்பத்தியிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய மூன்று மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால் அதிக பட்ச மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்கின்றன. இதனால் இந்த மூன்று மாதங்களும் காற்றாலைகளுக்கு மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யும் “பீக் லோட்’’ மாதமாகும்.

இந்த மாதங்களில் சராசரியாக 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது வழக்கம். மற்ற மாதங்களில் காற்றாலைகள் இரட்டை இலக்கம் அல்லது மின்சாரமே உற்பத்தி செய்யாமல் கிடப்பில் கிடக்கும். தற்போது மின் உற்பத்தி அதிகமாகும் மாதம் தொடங்கப்படாத நிலையில், காற்றாலைகள் சீசன் தொடங்குவதற்கு முன்பாக காற்றலைகள் மின்சார உற்பத்தியை தொடங்கின. குறிப்பாக நேற்று முன்தினம் 2,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. இதுகுறித்து காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் கூறியதாவது:–

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் மற்றும் தூத்துக்குடி, கயத்தாறு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் தமிழக மின்சார உற்பத்தியில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. கடந்த 4–ந்தேதி அக்னிநட்சத்திரத்துடன், கன்னியாகுமரி கடல்பகுதியில் மேல்அடுக்கு சுழற்சி காரணமாக இந்தப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாத தொடக்கதிலிருந்தே காற்றாலைகள் ஓரளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.

குறிப்பாக நேற்று 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று மொத்த மின்சாரத்தின் உற்பத்தி 10,894 மெகாவாட் என்ற நிலையில் பதிவானது. உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே வேறுபாடு இல்லாததால் நேற்று மின்தடை செய்யப்படவில்லை. பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 15–ந்தேதி வரை காற்றாலைகளால் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. கோடைக்காலத்தில் ஏற்படும் மின்பற்றாக்குறையை போக்க காற்றாலைகளும் இந்த ஆண்டு ஓரளவு கைகொடுத்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து