முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் கொள்கைகளால் முதலீடு அதிகரிப்பு :இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர்

சனிக்கிழமை, 23 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டு காலத்தில் தொழில் முதலீடு அதிகரித்துள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ)தலைவர் சந்திரஜித் பானர் ஜி தெரிவித்தார். பாஜக அரசு குறித்து அவர் மேலும் அவர் கூறியதாவது,
கடந்த 2014ம்ஆண்டு மே மாதம் மோடி அரசு பதவிக்கு வந்தது. அப்போதுஅவரது அரசு இரண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது ஒரு சவாலாக முதலீடு அளவு குறைந்திருந்தது. இரண்டாவது சவாலாக அரசு நிறுவனங்கள் மீது நம்பிக் கையின்மை காணப்பட்டது. இந்த 2சவால்களையும் மோடி அரசு நீக்கி தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.தற்போதைய மோடி ஆட்சியில் தொழில் நிபந்தனைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

அன்னிய முதலீடுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது .பாஜ அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி அடையத்துவங்கியுள்ளது.தொழில் துறை வளர்சியும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.குறிப்பாக மின் துறைகளில் இந்த அரசு நல்ல சாதனைகளை எட்டியிருக்கிறது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அரசின் வெளிப்படைத்தன்மையை உணர முடிகிறது.பொருளாதார வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு திறம் பட செயல்பட்டுள்ளது. உணவு தானிய தொகுப்பில் மிக அதிக அளவில் தானியங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் உணவுப்பொருட்களின் விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன.

பயனாளிகளுக்கு நேரடியாக பலன்கள் கிடைக்கவும்  இந்த அரசு நடவடிக் கை எடுத்துள்ளது இதனால் பணவீக்க விகிதம் கட்டுப்படுத்தப்படும் நிலை உள்ளது.நிதிப்பற்றாக்குறையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.காலம் தவறிய பருவ சூழ்நிலையால் இந்திய வேளாண்துறையின் நிலை நிச்சயமற்றதாக இருக்கிறது.இந்த நிலையில்வேளாண் உற்பத்தி அதிகரிக்கவும் வேளாண்துறையின் விநியோக சங்கிலி தொடர்பு அதிகரிக்கவும் நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் மக்களின் முன்னேற்றத்திற்கு மாநில அரசுகள் பொறுப்பாக இருக்கிறது. வரி விதிப்பு வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை  மாநிலங்களுக்கு வழங்குவது அதிகரித்துள்ளது.உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்த அரசு கவனம் கொண்டுள்ளது. ஸ்மார்ட் நகரங்கள்,டிஜிட்டல்இந்தியா, மற்றும் பள்ளிகளில் து◌ாய்மை வசதி ஆகியவற்றில் தொழில் துறைகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன.இதன் மூலம்  வளர்ச்சி மேம்பாடு இந்தியாவில்ஏற்படும் நிலை உள்ளது. 2016ம்ஆண்டிற்குள் அரசு பள்ளிகளில் நாடு முழுவதும் 10ஆயிரம் கழிப்றைகளை கட்ட வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பில் உள்ள தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன கல்லுாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக அவர்களுக்கு தொழில் கல்வி அளிக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

தொழிற்துறையினருக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சூழல் ஏற்பட்டு இருப்பதால் இந்தியா மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஏற்படும். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து