முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வை இன்று 1½ லட்சம் பேர் எழுதுகின்றனர்

சனிக்கிழமை, 23 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரதான தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்தது.இந்த தேர்வை நாடு முழுவதும் 10.25 லட்சம் பேர் எழுதினார்கள். இதற்கான முடிவுகள் ஏப்ரல் 27–ந்தேதி வெளியிடப்பட்டன.

இதில் இயற்பியல் பாடக்கேள்விகள் கடினமாக இருந்ததால் தற்போதைய பொதுப்பிரிவு கட்–ஆப் மார்க் 105 ஆக குறைந்தது. தமிழகத்தில் இருந்து பிரதான தேர்வை ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 11,500 பேர் குறைந்தபட்ச கட்–ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். இதன் மூலம் இவர்கள் முதன்மை தேர்வை எழுதும் தகுதியை பெற்றனர்.ஜே.இ.இ. முதன்மை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். பொதுப் பிரிவை சேர்ந்த 75,750 பேர், ஒ.பி.சி. பிரிவை சேர்ந்த 40,500 பேர், எஸ்.சி. பிரிவை சேர்ந்த 22,500 பேர், எஸ்.டி. பிரிவை சேர்ந்த 11,250 பேர் எழுதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து