முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக் கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சர் நேற்று கூறியதாவது: தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக் கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தால் பாகிஸ்தானும் பெரும் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. இந்த தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக எங்களது பாரதிய ஜனதா கூட்டணி அரசு நடவடிக் கை எடுத்து வருகிறது. தீவிரவாதத்திற்கு யார் காரணம் என்பதை உலகம் முழுமைக்கும் தெரியும். எனவே பயங்கரவாத்தை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இந்திய எல்லையை ஊடுருவி பெரும் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதனை இந்திய எல்லையில் இருக்கும் நமது வீரர்கள்முறியடித்து வருகிறார்கள். கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் ஊடுருவி இந்தியர்கள் ,வெளிநாட்டவர்கள் என 166பேரை கொன்று குவித்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த கொடூரச்செயலை கண்டு உலக நாடுகள் அதிர்ந்தன.

பாகிஸ்தானில் பயிற்சி எடுக்கும் தீவிரவாதிகள் அந்த நாட்டிலும் தாக்குதலை நடத்தி அந்த நாட்டு அரசுக்கு நெருக்கடியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த மாதம் 13ம் தேதியன்று பாகிஸ்தான் கராச்சியில் ஓடும் பஸ்சில் ஏறிய தீவிர வாதிகள் துப்பாக்கியால் 40 பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தனர். பாகிஸ்தானில் தீவிரவாதம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்அந்த நாடு உஷார் அடையும் வகையில் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து