முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு வாழ் இந்தியர்களை ஈர்ப்பதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் முயற்சி :தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

திங்கட்கிழமை, 25 மே 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - வெளிநாட்டு வாழ் இந்தியர்களை ஈர்ப்பதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக் கை விடுத்துள்ளது. ஐ,எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பின்னர்நாடு திரும்பிய மும்பை கல்யாண் பகுதியைச்சேர்ந்த வாலிபர் ஆரிப் மஜித் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை முடிவில் தேசிய புலனாய்வு பிரிவு கடந்த மாதம் 20ம் தேதியன்று 8ஆயிரத்து 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில் மஜித்தின் நண்பர்கள் பகத் ஷேக் அமான் தன்டீஸ்,ஷகீம் தன்கி ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து பயங்கர வாத செயல்கள் ஈடுபட முனைந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.கடந்த 2014ம்ஆண்டு மஜித்தின் செல்போனில் ஐஎஸ் அமைப்பின் தகவல்கள் இருப்பது தெரிய வந்தன. அவர் பேஸ் புக் தளத்திலும் ஐஎஸ் அமைப்பு தகவல்களை பரிமாறிகொண்டுள்ளார்.அதில் சிரியா ஈராக் போன்ற இடக்ளில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் படங்கள் வெளியாகி இருந்தன.

பின்னர் படிப்படியாக மஜீத்தை ஜிகாதி வேலைகளுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் ஈர்த்துள்ளனர் என்றும் அந்த குற்றப்பத்திரிகை யில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஐஎஸ் தீவிரவாதிகளை சென்றடைவதற்கு மஜீத் ஆஸ்திரேலியா,துருக்கி,சவுதி அரேபியா ஈராக்,அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் உள்ள பலரையும் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் டிரவால் ஏஜென்டுகள் மூலம் பாக்தாத் சென்றிருக்கிறார். இந்த சதிகளில் அவரது கூட்டாளிகளும் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் யாரும் தங்களது பயண விவரங்கள் குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்கவில்லை.

இதில் பகத் மட்டும் இஸ்லாமை காப்பாற்றுவதற்காக இந்தியாவை விட்டு செல்கிறேன் என்ற குறிப்பை வீட்டில் குறிப்பு விட்டு சென்றிருக்கிறார். அபு பாத்திமா என்ற நபர் மஜீத்தை வழிநடத்தி சென்றிருக்கிறார். அவர் மூலமாக அப்துல்லா ஹாதி என்பவரிடம் இருந்து ரூ64ஆயிரம் உதவியை மஜீத் பெற்றிருக்கிறார் என்று தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து