முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கே மோடி பிரதமர்: காங்கிரஸ் தலைவர் கிண்டல்

திங்கட்கிழமை, 25 மே 2015      இந்தியா
Image Unavailable

காந்தி நகர் - நரேந்திர மோடி இந்தியர்களுக்கு அல்ல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரதமர் என்று காங்கிரஸ் தலைவர் கிண்டல் அடித்துள்ளார். குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் போர்சத் என்ற இடத்தில் மிகப்பெரிய காய்கறி சூப்பர் மார்க்கெட் வளாகத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளரும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான அகமது படேல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நரேந்திர மோடி ஓராண்டாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரதமராகத்தான் இருந்துள்ளார்.

லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட ஓராண்டு ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை. எப்போதும் செல்பி மோகம் கொண்ட பிரதமராகவும், வெளிநாட்டு பயணங்களில் ஆர்வம் காட்டுபவராகவும் மட்டுமே பிரதமர் மோடி விளங்கி வருகிறார். விவசாயிகளுக்கும், எளிய மக்களுக்கும் பிரதமர் மோடி அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசு நிறைவேற்றாத காரணத்தால் மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.

தற்போது மத்தியில் உள்ள பாஜ அரசு தொழில் துறைக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் மட்டுமே சாதகமான அரசாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளை பற்றிய அக்கறை கொஞ்சம் கூட கிடையாது. கடந்த காலத்தில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை விவசாயிகளுக்கு விரோதமாக திருத்த முயற்சி செய்து வருகிறது. இதனால் தங்களது சொந்த வெளாண் நிலங்களில் இருந்து விவசாய மக்கள் வெளியே வீசி எறியப்படும் அவல நிலை உருவாகியுள்ளது என்று கடுமையாக சாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து