முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலேப் முன்னேற்றம்

திங்கட்கிழமை, 25 மே 2015      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ் - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் உலகின் 2ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் துவங்கியது. ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. உலகின் 2ம் நிலை வீரரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், கொலம்பியாவின் ஆண்ட்ரூ பாலாவை எதிர்கொண்டார். துல்லியமான சர்வீஸ்களை வீசிய ரோஜர் பெடரர், இந்த ஆட்டத்தில் 87 ஏஸ் சர்வீஸ்களை விளாசினார். 78 சதவீத முதல் சர்வீஸ்களில் பெடரர் புள்ளிகளைக் குவித்தார்.

நான்கு முறை பாலாவின் சர்வீஸ்களை முறியடித்த பெடரர், 6-3,6-3,6-4 என நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் ஜோ வில்பிரெட் சோங்கா, ஸ்வீடன் வீரர் லிண்டெலை எதிர் கொண்டார். சோங்காவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார் லிண்டெல். சோங்கா இந்த ஆட்டத்தில் 6-1,6-2,6-2 என நேர் செட்களில் லிண்டெலை எளிதாக வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்பெயின் வீரர் குல்லெர்மோ கார்சியா லோபஸ், அமெரிக்காவின் ஜான்சனை எதிர்கொண்டார். இதில் இரு வீரர்களும் கடுமையான போராட்டத்தில் இறங்கினர்.

முதல் 2 செட்களை வென்று கார்சியா லோபசுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஜான்சன். ஆனால் சுதாரித்து ஆடிய லோபஸ் மூன்றாவது, நான்காவது செட்களை வென்றார். ஐந்தாவது செட்டில் லோபஸின் சர்வீஸ் கேமை முறியடித்த ஜான்சன், ஆட்டத்தில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் ஜான்சன் 6-3, 6-3, 6-7, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் லோபஸை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீராங்கனையான அனா இவானோவிக், கசகஸ்தானைச் சேர்ந்த ஷிவிடோவாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை வென்றார் ஷிவிடோவா, பின்னர் சுதாரித்து ஆடிய இவானோவிக் கடைசி 2 செட்களையும் கைப்பற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்றார். இவானோவிக் 4-6, 6-2, 6-0 என்ற செட்கணக்கில் ஷிவிடோவாவை வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலோப், 7-5, 6-4 என நேர் செட்களில் ரோடினாவை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து